இவர்களுக்கே முன்னுரிமை.. டெல்லி செல்லும் முன் அண்ணாமலை வைத்த ட்விஸ்ட்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் உத்தேச பட்டியலை டெல்லி தலைமையிடம் சமர்ப்பிப்பதற்கு முன்பு சென்னை டி.நகரில் உள்ள தமிழக பாஜக அலுவலக கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை "தமிழக வேட்பாளர்கள் குறித்து டெல்லியில் உள்ள பாராளுமன்ற தேர்தல் குழு முடிவெடுப்பார்கள்.

நாங்கள் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் வேட்பாளர்கள் பட்டியலை வழங்க சென்று கொண்டிருக்கிறோம். 

கீழே தொண்டர்கள் சொல்வதை மேலே கொண்டு செல்வது தான் எங்களுடைய வேலை. 39 தொகுதிகளுக்கும் பாஜக தலைவர்கள் சென்று தொண்டர்களின் விருப்பத்தை கேட்டு அவர்களின் விருப்பத்தை பெற்றுள்ளனர். 

ஒரு தொகுதியில் 63 பேரை வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளனர் காஞ்சிபுரத்தில் 43 பேரை முன்மொழிந்து உள்ளனர் மத்திய சென்னையில் 34 பேரை முன்மொழிந்துள்ளனர் சேலத்தில் 51 பேரை முன்னுரித்து உள்ளனர். இதுபோன்ற தொகுதிகளில் அதிகமான வேட்பாளர்களின் பெயர்கள் பாஜக தொண்டர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று பாஜக தொண்டர்கள் அவர்களுக்கு பிடித்த வேட்பாளர்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளனர். 

இதை அனைத்தையும் அகில இந்திய தலைமையிடம் கொடுப்பதுதான் எங்களுடைய கடமை. ஒரு மாநிலத் தலைவராக வேட்பாளரின் பெயர்களை குறிப்புகள் விரும்பவில்லை. வேட்பாளர்கள் பெயரை மத்திய தலைமையிடம் வைக்கிறோம் அவர்கள் முடிவெடுப்பார்கள். 

பெண் வேட்பாளர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்துள்ளோம் 39 தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை கட்சித் தொண்டர்கள் முன்மொழிந்து உள்ளனர். எனவே பெண் வேட்பாளருக்கு அதிக வாய்ப்பு வழங்க கட்சி முன்வரும் என எதிர்பார்க்கின்றோம். அதனை மேலிட தலைமை முடிவெடுக்கும்" எனக்கு தெரிவித்தவாறு டெல்லி புறப்பட்டுச் சென்றார் அண்ணாமலை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai said BJP give more opportunities to women candidates


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->