வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவிற்கு 25 எம்பி கிடைப்பது உறுதி.. அண்ணாமலை நம்பிக்கை.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்ட பாஜக சார்பில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் பாஜகவிற்கு 25 எம்பிக்கள் கிடைப்பது உறுதி.

 25 எம்பிக்கள் வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு 5 மத்திய அமைச்சர்களை போராடிப் பெற்றுத் தருவது என்னுடைய பொறுப்பு எனக் கூறினார் .மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. மீண்டும் அவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்களுக்கு ஆண்டுக்கு 25 விமான டிக்கெட், இலவச தொலைபேசி இணைப்பு தவிர வேறு எதுவும் கிடைக்காது என கூறினார். 

பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தல் ஒவ்வொரு தொகுதியிலும் ரூபாய் 5 ஆயிரம் கோடி நல திட்டங்கள் கொண்டு வரப்படும். வரக்கூடிய தேர்தலில் பாஜகவை ஆதரிக்க  மக்கள் தயாராகி விட்டனர் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai speech in bjp meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->