3000 கோடி கொள்ளை அடித்த அதானி மீது FIR போட மறுக்கும் திமுக அரசு! அறப்போர் இயக்கம் காட்டம்! - Seithipunal
Seithipunal


அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "4 மாவட்டங்களில் மக்களுக்கு புயலால் பெருந்துயர் ஏற்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அங்கே சென்று சுகாதார முகாம்களை நடத்துவதற்கு பதிலாக சென்னையில் உதயநிதியின் உதயநாள் விழா கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். 

தமிழக மின்சார வாரியத்தில் அதானி 3000 கோடி கொள்ளை அடித்து விட்டார். Transformer வாங்குவதில் 400 கோடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொள்ளை அடித்தவர்களை பிடித்து விசாரிக்காமல் கொள்ளை போன பணத்தை மின்கட்டண உயர்வு மூலம் மக்களிடம் திமுக அரசு வசூலிக்கிறது. 

ஏழை மக்களுக்கு கொடுக்கப்படும் ரேஷன் பொருட்களில் ஊழல் செய்து கிறிஸ்டி நிறுவனம் 2028 கோடி கொள்ளை அடித்துள்ளது. ஆனால் அவரை பிடித்து கொள்ளையடித்த பணத்தை மீட்காமல் ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் உணவுப் பொருட்களை குறைத்து மக்களை தவிக்க விடுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arappor Iyakkam DMK Govt Adani Scam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->