நான் உயிரோடு இருக்கும் வரை யாராலும் இட ஒதுக்கடை பறிக்க முடியாது - பிரதமர் மோடி!! - Seithipunal
Seithipunal


பட்டியலின, பழங்குடியின பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்தியா கூட்டணி வ விரும்புகிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

 இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. நாளை 6ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள 6ம் கட்ட மக்களவைத் தேர்தலில் அரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரியானாவில் நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்கு பதிவு நிறைவடைந்த நிலையில் இந்தியா கூட்டணி தோல்வியை உணர தொடங்கிவிட்டது.

இந்த முறையும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று சிறு குழந்தையும் தெரிந்து வைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஊடுருவக்காரர்களுக்கு ஓபிசி சான்றிதழ் வழங்கியுள்ளது. அதனை அம்மாநில நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதை ஏற்க மாட்டேன் என்று மேற்கு வங்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறி வருகிறார். நான் உயிரோடு இருக்கும் வரை எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது.

 தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஆட்சியில் பாரதத்தில் முஸ்லிம்கே முதலிடம்.பட்டியலின, பழங்குடியின பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம் இட ஒதுக்கீடு வழங்க இந்திய கூட்டணி விரும்புவதாக மோடி கடுமையாக சாடினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

As long as I am alive no one can take away reservation PM Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->