ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமனை கட்சியிலிருந்து நீக்கிய காங்கிரஸ்! - Seithipunal
Seithipunal


ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் என்ற சிபிசிஐடி போலீசாரல் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கடந்த மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூர் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை அரசியல் ரீதியான படுகொலை என்றும் முதலில் சொல்லப்பட்ட நிலையில், இந்த வழக்கு உடனடியாக சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் ஏற்கனவே சரணடைந்த எட்டு பேர்கள் மட்டுமல்லாமல், அதிமுக, திமுக, பாஜக தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட தங்கள் கட்சி நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி சம்பந்தப்பட்ட கட்சிகள் அதிரடி நடவடிக்கையும் மேற்கொண்டது. 

இந்த நிலையில், இந்த படுகொலை சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த அஸ்வத்தாமனை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரபல ரவுடியும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நாகேந்திரனின் மகன் தான் இந்த அஸ்வத்தாமன் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 

மேலும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருள் கொடுத்த தகவலின் படி தற்போது அஸ்வத்தாமனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், அஸ்வத்தாமனை காங்கிரஸ் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி கட்சியின் தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ashwathaman dismiss Congress Armstrong case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->