ஜம்மு - காஷ்மீரில் நிறைவடைந்தது சட்டசபை தேர்தல்!...ஒட்டு மொத்த வாக்குப்பதிவு விவரம் இதோ! - Seithipunal
Seithipunal


ஜம்மு - காஷ்மீரில், சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக காஷ்மீரில் 16 தொகுதிகள் மற்றும்  ஜம்முவில் 8 தொகுதிகள் என 24 தொகுதிகளுக்கு முதல் கட்ட சட்டசபை தேர்தல் கடந்த 18-ம் தேதி  நடைபெற்றது. இதில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின.

தொடர்ந்து 2ம் கட்ட சட்ட சபை தேர்தல் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில்  57.31 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் மொத்தம் 239 வேட்பாளர்கள் களம் கண்ட சூழ்நிலையில், 3 ஆயிரத்து 502 வாக்குச்சாவடி மையங்கள் வாக்களிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஜம்மு உள்பட 7 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளில்  நேற்று 3-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 68.72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மேலும் காஷ்மீரில் ஒட்டுமொத்த வாக்கெடுப்பு சதவீதம் 63.45 சதவீதமாக உள்ளதாக  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வரும் அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assembly elections completed in jammu and kashmir here the total voting details


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->