சென்னையைத் தொடர்ந்து மதுரையில் உயர்ந்த சொத்து வரி - அதிர்ச்சியில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் நடைபெற்ற சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது. இந்த சொத்துவரி உயர்வுக்கு அனைத்து எதிர்கட்சிகளும் தங்களது கண்டங்கனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் 6% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். மதுரை மாநகராட்சிக்கு குடிநீர், பாதாளச் சாக்கடை, தொழில், குப்பை வரி என்று, பல்வேறு வகையில் ஆண்டுக்கு பல கோடி வருவாய் கிடைக்கிறது. 

இருப்பினும், சொத்து வரியே மாநகராட்சிக்கு பிரதான வருவாயாக உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 350 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயை வைத்து மாநகராட்சி பகுதியிலுள்ள வார்டுகளுக்கான வளர்ச்சி, சாலைகள் பராமரிப்பு, கால்வாய்கள் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். 

இதற்காக மாநகராட்சிகள் ஆண்டுக்கு ஆறு சதவீதம் சொத்து வரியை உயர்த்திக்கொள்ளலாம் என்று நகராட்சி நிர்வாகத் துறையின் உத்தரவும் உள்ளது. இதனால், மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

property tax increase in madurai muncipality


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->