வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!...2024-ல் தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் பெரும் சோகம்! - Seithipunal
Seithipunal


இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இந்த ஆண்டில் பருவமழை காலத்தில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணமாக 1,492 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில், வெள்ளம் மற்றும் மழை தொடர்பான சம்பவங்களால் 895 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மழையின்போது இடி மற்றும் மின்னல் தாக்கி 597 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு பருவமழையின்போது இந்தியா 525 கனமழை நிகழ்வுகளை சந்தித்துள்ளதாகவும், இதன் மூலம் 115.6 மிமீ முதல் 204.5 மிமீ வரை மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும், 96 மிக அதிக மழை நிகழ்வுகளை இந்தியா சந்தித்ததன் மூலம் 204.5 மிமீக்கு மேல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக மத்தியப் பிரதேசத்தில் 100 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றும், கேரளாவில் 397 பேரும், அசாமில் 102 பேரும்,  தலைநகர் டெல்லியில் வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக 13 பேர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையின்போது இடி, மின்னல் தாக்கியதில் மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் 189 பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள வானிலை மையம், உத்தரப் பிரதேசத்தில்  138 பேரும், பீகாரில் 61 மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 53 என  அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meteorological enter shocking information the number of deaths due to extreme weather events in 2024 is a tragedy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->