அமித்ஷாவுக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்! நேரடியாகவே கண்டித்த சித்தராமய்யா! - Seithipunal
Seithipunal


'சும்மா அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொன்னால் சொர்க்கம் செல்ல முடியாது. அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது' என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்" என்று அமித்ஷாவுக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கர்நாடக முதல்வர் சித்தராமய்யா நேரடியாகவே தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதில், "என் வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்பது போன்ற வழக்கமான விஷயங்களை சொல்லி தப்பித்துக் கொள்ள பார்க்காதீர்கள்!  உங்களது உள்நோக்கம் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது" என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் மூலம் முதல்வர் சித்தராமய்யா கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Babasaheb Ambedkar Amit Shah BJP DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->