தமிழிசை சவுந்தராஜன் கைது! பாஜக கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடக்கும் தாக்குதலை கண்டித்து நடந்த போராட்டத்தில், பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தராஜனை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு தமிழநாடு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி வருபவர்களுக்கு  ஆதரவாக செயல்படும் வங்கதேச அரசை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் கைது செய்துள்ளது ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அரசின் காவல்துறை..!

வங்கதேசத்தில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக தமிழ்நாடு முழுவதும்  ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க நிர்வாகிகள் தொண்டர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

'ஒரே சமயத்தில் பாரதத்தின் இரு மாநில அரசுகளின் ஆளுநராக இருந்தவரான திருமதி. தமிழிசை சவுந்தராஜன் அவர்களையும் கைது செய்து இருக்கும் திமுக அரசின் நடவடிக்கைகள் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladesh Hindus issue BJP Protest tamilsai arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->