தேனியில் பரபரப்பு! போராட முயன்ற பாஜகவினரை குண்டு கட்டாக தூக்கி போலீஸ்! - Seithipunal
Seithipunal


சனாதன எதிர்ப்பு பேரணிக்கு கண்டனம் தெரிவித்து தேனி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தேனியில் திமுகவின் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக என பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் சார்பில் சனாதன ஒழிப்பு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

தேனி பழைய பள்ளிவாசல் பகுதியில் இருந்து நேரு சிலை வரை இந்த பேரணிக்கு அனுமதி பெறப்பட்டு இன்று காலை பேரணி செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்காக தேனி மாவட்ட பாஜகவினர் நேரு சிலையின் முன்பு குவிந்திருந்தனர். 

அப்போது அவர்கள் சனாதான ஒழிப்பு பேரணிக்கு எதிராக கோஷம் எழுப்ப முடிவு செய்து கூடியிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பேரணி நடைபெறும் போது எந்தவித அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தேனி மாவட்ட டிஎஸ்பி பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்திய போது திடீரென பாஜகவினரை சட்டை பிடித்து இழுத்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினார். அதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதையும் மீறி அது கூட இருந்த பாஜகவினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

ஒருபுறம் சனாதன ஒழிப்பு பேரணி நடைபெற மறுபுறம் பாஜகவினர் காவல் துறையினரால் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழலில் இருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP cadres arrested for protect against dmk alliance parties


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->