வெற்றி பெற்றால்... நானே வந்து பூட்டு போடுறேன் - உறுதியளித்த பா.ஜ.க வேட்பாளர்.!
BJP candidate campaign
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அஸ்வந்த்தாமன், கீழ்பெண்ணாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதற்கு முன்னதாக ஆவூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் 30 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயர் சிலையை வழிபட்டு பின்னர் பிரசாரத்தை தொடங்கினார்.
அப்போது அவர், வருகின்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நானே நேரடியாக வந்து பூட்டு போடுகிறேன் என உறுதி அளித்துள்ளார்.