திடீர் திருப்பம்.. ஜெ.ஜெ, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் குவிந்த பாஜகவினர்.!! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை பொது தேர்தலில் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மும்பை போட்டி நிலவு வரும் இத்தகைய சூழலில் அதிமுக தலைவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

கடந்த சில மாதங்களாகவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை, ஜெயலலிதா குறித்து கடமையாக விமர்சனம் செய்து வருகிறார் அண்ணாமலை. இதற்கிடையே தேனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் கையில் இருக்கும் என பேசி இருந்தார். 

இதனால் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். இதற்கிடையே மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் இன்று வழிபாடு செய்துள்ளனர்.

ஒருபுறம் பாஜக தலைவர் அண்ணா மலை அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் பாஜக வேட்பாளர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவுகளில் வழிபாடு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஒருபுறம் பாஜக தலைவர் அண்ணா மலை அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் பாஜக வேட்பாளர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவுகளில் வழிபாடு செய்திருப்பது பாஜகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP candidates pray at Jayalalithaa MGR memorials


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->