திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி ரதம் தடுத்து நிறுத்தம்! காவல்துறை அராஜகம் - கொந்தளிக்கும் பாஜக!
BJP Condemn To DMK Govt TN Police
திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி ரத யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தி அராஜகத்தில் ஈடுபடுவதாக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக நிர்வாகி அஸ்வத்தாமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மகா சிவராத்திரிக்காக நடைபயணமாக சென்னையில் இருந்து வெள்ளிங்கிரி மலைக்கு ஈஷா மையம் வரை ரதத்தை எடுத்துக்கொண்டு நடைபயணம் செய்த ஆன்மீக பக்தர்கள் செய்யாறு அருகே காரணமே இல்லாமல் தமிழக காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இத்தனைக்கும் டிஜிபி இடம் முறையான அனுமதி பெற்று தான் அவர்கள் நடைபயணம் துவக்கினார்கள். எந்தவித காரணமும் சொல்லாமல் வேண்டுமென்றே கடந்த ஐந்து மணிநேரமாக பக்தர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
திராவிட மாடல் ஆட்சியில் கோவிலுக்கு போவது கொடுங்குற்றமா என்ற கேள்வி எழுகிறது. இந்து தர்ம வழிபாட்டு நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டும் என்கிற திராவிட சித்தாந்தத்தின் கைக்கூலியாக செயல்பட்டு இந்த மோசமான நடவடிக்கையை செய்துள்ளதா தமிழக காவல்துறை?!
உடனடியாக தமிழக காவல்துறை தன்னுடைய அராஜகத்தை நிறுத்தி, அந்த பக்தர்களை யாத்திரை தொடர அனுமதிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Condemn To DMK Govt TN Police