அரசியல் யுத்தம் ஆரம்பம்! அதிமுகவுக்கு பாஜகவில் முதல் பதிலடி! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி "மக்களவை தேர்தல் மட்டுமில்லை இனி எந்த தேர்தலிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற அதிமுக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை"

புதிய கூட்டணி அமைத்து, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்கும். பாஜக ஆட்சி காலத்தில் அவர்கள் செய்த தவறுகளை கண்டிப்பதாக தேர்தல் பிரசாரத்தில் சுட்டிக்காட்டுவோம். தமிழ்நாடு மக்களின் நலன், உரிமையை பாதுகாக்க நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாடுபடும். மீண்டும் பாஜக உடன் கூட்டணி வைக்கப் போவதில்லை" என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு எதிர்வினை ஆற்றாமல் இருந்த தேசிய  பாஜக தரப்பிலிருந்து தற்போது முதல் முறையாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முன்னாள் அமைச்சரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராகவும் இருந்த சி.டி ரவி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "புனிதமான திருவள்ளுவர் மண்ணில், தாமரை பெரும் வெற்றி பெறும்" என பதிவிட்டுள்ளார். அதிமுக துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி பாஜக தலைமையிலான கூட்டணி அதிமுக மீண்டும் இணையப் போவதில்லை என உறுதிப்பட தெரிவித்த சில மணி நேரத்தில் பாஜக தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP CTRavi response to AIADMK kpmunusamy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->