பாஜக நிர்வாகி எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.. மதுரை மத்திய சிறையில் அடைப்பு..!! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் குறித்து தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறு பேசியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சென்னை தி.நகரில் உள்ள எஸ்.ஜி சூர்யாவை அவரது இல்லத்தில் நேற்று நள்ளிரவு மதுரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட எஸ்.ஜி சூர்யா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்ற முடிந்த நிலையில் அவரை கைது செய்த மதுரை சைபர் கிரைம் போலீசார் அழைத்துச் சென்றனர். 

இது குறித்து தகவல் அறிந்த பாஜகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். எஸ்.ஜி சூர்யா கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜகவை சேர்ந்தவர்கள் பலரும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில அவதூறு மற்றும் பொய்க் செய்தி பரப்பிய புகாரில் கைதான பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா இன்று மதுரை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் சங்கரன் எஸ்.ஜி சூர்யாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அடுத்து தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வரும் ஜூலை 1ம் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP executive SG surya remanded 15 days court custody


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->