6 மாத சிறைத்தணடனை! தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த ஹெச்.ராஜா!
BJP H Raja case
திமுக எம்.பி., கனிமொழியை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கு மற்றும், பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசிய வழக்கில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டு திமுக எம்.பி., கனிமொழிக்கு எதிராக எக்ஸ் தளத்தில் தரக்குறைவாக கருத்து கூறியதாக தொடரப்பட்ட வழக்கு தொடரப்பட்ட வழக்கும், பெரியார் சிலையை உடைப்பேன் என பேசிய வழக்கில், சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஹெச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
மேலும், தீர்ப்பை எதிர்த்து எச் ராஜா மேல்முறையீடு செய்ய (கைது நடவடிக்கையை தவிர்க்க) கால அவகாசம் வழங்கும் வகையில், சிறைத்தண்டனையை தற்போது நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஹெச்.ராஜா மேற்முறையீடு செய்துள்ளார்.
"நேரடி சாட்சியங்களோ, ஆதாரங்காளோ இல்லாத நிலையில் விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது சட்ட விரோதமானது" என்று அந்த மேல்முறையீட்டு மனுவில் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.