எச்.ராஜாவின் சிறை தண்டனையை நிறுத்திவைக்க சிறப்பு நீதிமன்றம்!
BJP H Raja Madras HC ORDER
பெரியார் சிலை உடைப்பு விவகாரம் மற்றும் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான அவதூறு கருத்து ஆகிய இரு வழக்குகளில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தலா 6 மாத சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
இன்று மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கெளரி, மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்கின் விவரம்:
கடந்த 2018ம் ஆண்டு திமுக எம்.பி., கனிமொழிக்கு எதிராக எக்ஸ் தளத்தில் தரக்குறைவாக கருத்து கூறியதாக தொடரப்பட்ட வழக்கு தொடரப்பட்ட வழக்கும், பெரியார் சிலையை உடைப்பேன் என பேசிய வழக்கில், சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஹெச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை வழங்கியது.
மேலும், தீர்ப்பை எதிர்த்து எச் ராஜா மேல்முறையீடு செய்ய (கைது நடவடிக்கையை தவிர்க்க) கால அவகாசம் வழங்கும் வகையில், சிறைத்தண்டனையை தற்போது நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இதனையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஹெச்.ராஜா மேற்முறையீடு செய்தார். அதில், "நேரடி சாட்சியங்களோ, ஆதாரங்காளோ இல்லாத நிலையில் விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது சட்ட விரோதமானது" என்று அந்த மேல்முறையீட்டு மனுவில் ஹெச்.ராஜா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
BJP H Raja Madras HC ORDER