குஷியில் பாஜகவினர்! பாஜக உட்கட்சி தேர்தல் நவம்பரில் தொடக்கம்: பொறுப்பாளர்களுக்கு டெல்லியில் பயிற்சி!
BJP Internal Party Elections Begin in November Training for In charges in Delhi
சென்னையில் பாஜக மாநில நிர்வாகம், நாடு முழுவதும் நடைபெற்று வரும் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தமிழகத்தில் வேகமாக முன்னெடுத்து வருகின்றது. மாநிலம் முழுவதும், பாஜக கிளைகளில் குறைந்தது 200 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் செயல்படுகிறார்கள்.
ஆனால், பாஜக வட்டார தகவல்களின் அடிப்படையில், எதிர்பார்த்த அளவிற்கு உறுப்பினர் சேர்க்கை நிகழவில்லை என்று கூறப்படுகிறது. தற்போதுவரை 30 லட்சம் அளவிலேயே உறுப்பினர்கள் இணைந்துள்ள நிலையில், இதனால், உறுப்பினர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக பாஜக நிர்வாகிகள் மேலிடத்திற்கு கோரிக்கை விடுக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், பாஜக அமைப்பு தேர்தல் பணிகளும் முன்னேறி வருகின்றன. நவம்பர் முதல் வாரத்தில் கிளைத் தலைவர்கள், மண்டல தலைவர்கள், மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேற்கான தேர்தல் பொறுப்பாளர்களாக, பாஜக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மற்றும் இணை பொறுப்பாளர்களாக செல்வக்குமார், மீனாட்சி நித்யாசுந்தர், கதளி நரசிங்க பெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தல் பணிகளை விரைவாக முன்னெடுப்பதற்காக, டெல்லியில் தேசிய அளவிலான தேர்தல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு, கட்சி தலைமை வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் தேர்தல் பணிகளை விரைவில் தொடங்க உள்ளனர்.
English Summary
BJP Internal Party Elections Begin in November Training for In charges in Delhi