இன்று அதிகாலை பலியான போலீஸ் எஸ்ஐ! காவல்துறைக்கு பேரிழப்பு.. பெரும் வேதனையில் முதல்வர் ஸ்டாலின்! ரூ.25 லட்சம் நிதி! - Seithipunal
Seithipunal


பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்தவர் சரவணன் (வயது 36).

இவர் இன்று 31.10.2024 அதிகாலை சுமார் 1.00 மணியளவில் பரமக்குடி நகரில் இரவு நேர ரோந்துப் பணியின்போது கீழே விழுந்த இருப்புக் கம்பத்தை அகற்றும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உயிரிழந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

மேலும், உதவி ஆய்வாளர் சரவணன் அவர்களின் மறைவு, தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

உதவி ஆய்வாளர் சரவணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MK Stalin Condolance to Police SI Saravanan death paramakudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->