என் விசுவாசத்திற்கு அங்கீகாரம் இல்லை! பதவி விலகிய பாஜக புள்ளி! அண்ணாமலைக்கு பறந்த கடிதம்! - Seithipunal
Seithipunal


திருச்சி பாஜக துணை தலைவர் ஜெயகர்ணா தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருக்கும் ஜெயகர்ணா, தனது ராஜினாமா பாஜக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

மேலும், தன்னுடைய உழைப்பு, விசுவாசத்திற்கு பாஜகவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் ஜெயகர்ணா அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை அவர்களின் நண்பர் என்று சொல்லப்படும் திருச்சியின் இளம் தொழிலதிபர் ஜெயகர்ணா, தனது ஆதரவாளர்கள் 5000 பேருடன் கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். மேலும் இவர் G.K.வாசன் ஆதரவாளர் என்று சொல்லப்படுகிறது.


SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாஜக நிர்வாகி கைது!

திருப்பூர்: காங்கேயத்தில் பட்டியலின இளைஞரை தாக்கிய வழக்கில், பாஜக ஒன்றிய பொதுச் செயலாளர் சதீஸ் குமார் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் சதீஸ் குமார், வாகனத்திற்கான தவணைத் தொகை செலுத்தாத விவகாரத்தில் சங்கர் என்ற இளைஞரை தாக்கி உள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து தாக்குதலுக்கு உள்ளான சங்கர் அளித்த புகாரின் பேரில் இன்று சதீஸ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Jayakarna Resign


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->