குஷ்புக்கு பதிலாக பிரச்சாரத்தில் குதித்த இயக்குனர் சுந்தர்.சி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், நடிகரும் பாஜக மேல்மட்ட நிர்வாகிகளில் ஒருவருமான குஷ்பு எலும்பு முறிவு பிரச்சனையால் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகினர். சமூகவலைத்தளங்களில் பலரும் பாஜக குஷ்புக்கு சீட்டு ஒத்துக்காததாலே தேர்தல் பிரச்சாரத்திலிருந்து விலகிவிட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இயக்குனரும் குஷ்புவின் கணவருமான சுந்தர். சி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறக்கி இருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட சுந்தர்.சி பேசுகையில், பதிவி இல்லாதபோதே மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தவர் தேர்தலில் வென்றால் இன்னும் அனைத்து அத்தியாவசிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார். நீங்கள் தேர்தெடுத்து மக்களவைக்கு அனுப்பபோவது மக்களவை உறுப்பினரை அல்ல, மத்திய அமைச்சரை என்றார்.

சுந்தர். சி இயக்கத்தில் திரைக்கு வர உள்ள அரண்மனை பாகம்-4. அத்திரைபடத்தின் தயாரிப்பாளர் ஏ.சி சண்முகத்தை மகன் அருண்குமார் என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp kushbhu husband director sundhar c supported to nd alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->