'கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்' -பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில பொது தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. கர்நாடக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் 306 அறைகளில் 4,258 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

கர்நாடக மாநிலத்தில் பொதுத் தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் 137 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அதில் தற்பொழுது வரை 82 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. கர்நாடகாவை ஆளும் பாஜக 63 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா பாஜகவின் தோல்வி குறித்து பேசியுள்ளார். 

கர்நாடகா தேர்தல் குறித்து அவர் பேசியதாவது, பாஜகவுக்கு வெற்றி தோல்வி ஒன்றும் புதிதல்ல. இந்த முடிவுகளால் கட்சி தொண்டர்கள் அச்சம் அடையத் தேவையில்லை. கட்சியின் பின்னடைவு குறித்து ஆய்வு செய்வோம் மக்களின் இந்த தீர்ப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP leader Yediyurappa speech about Karnataka assembly election results


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->