அதிமுகவின் திட்டங்களை கூறி திமுகவை தாக்கிய பாஜக எம்எல்ஏ.!!
BJP MLA attacked DMK saying AIADMK schemes
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி ஆதரித்து பொன்னேரி பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் "இந்தியாவை கண்டு உலகமே வியக்கும் நிலைக்கு வந்துள்ளோம். ஆனால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாள்தோறும் பொய் சொல்லி வருகிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த பூனை பால் குடித்து ருசி கண்டுள்ளது. மீண்டும் பால் குடிப்பதற்காக அந்த பூனை வருகிறது. மக்கள் இனி ஏமாறக்கூடாது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வந்த லேப்டாப் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
படித்த பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்கள் கூட முறையாக கொடுக்கவில்லை. இதெல்லாம் நல்ல திட்டங்களோ அதையெல்லாம் நிறுத்திவிட்டார்கள்.
சமூகநீதி பெண்ணுரிமை பேசும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது மகனை மட்டுமே அமைச்சராக்கியுள்ளார். அவரது மகளை ஏன் கொண்டு வரவில்லை? முதலமைச்சர் வீட்டில் கூட பெண் குழந்தைகளுக்கு சமூக நீதி இல்லை.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் 11 பெண் அமைச்சர்கள் உள்ளனர் என விமர்சனம் செய்த வானதி சீனிவாசன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "தமிழ்நாடு பிரித்து இருப்பதால் இன்னும் பலமுறை மோடி வருவார். முதல் கையெழுத்து நீட் தேர்வு விலக்குக்காக போடுவதாக கூறி 2021ல் ஏமாற்றியுள்ளனர்" என குற்றம் சாட்டியுள்ளார் வானதி சீனிவாசன்.
English Summary
BJP MLA attacked DMK saying AIADMK schemes