போதைப் பொருள் கடத்தலுக்கு தமிழக காவல்துறை துணைபோகும் அவலம் - அதிரவைக்கும் டிவிட்! - Seithipunal
Seithipunal


தமிழக காவல்துறை உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் போதைப் பொருள் கடத்தலுக்கு துணைபோகும் அவலநிலை இருப்பதாக, பாஜக எம்எல்ஏ வாந்தி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு, 850 தமிழக காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் துணைபோனதாக வெளியாகியுள்ள செய்தி தமிழக மக்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக உள்துறை அமைச்சகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் அவர்களே, 

📌தமிழகம் போதையின் பிடியில் சிக்கியிருக்க, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவேன் என்று நீங்கள் எடுத்த உறுதிமொழி என்னவாயிற்று?

📌உங்கள் நிர்வாகத்தில் உள்ள அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் இதுபோன்ற போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவது இத்தனை நாட்கள் உங்களுக்கு தெரியவில்லையா?

📌 தமிழகத்தில் ஒருபுறம் “கஞ்சா வேட்டை” என்ற நாடகத்தை நடத்தும் உங்கள் அரசு, மறுபுறம் போதைப்பொருள் கடத்தல்களுக்கு துணை நிற்கிறதா?

📌தமிழகத்தில் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென தமிழக நீதிமன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்திய பிறகும், தமிழக முதல்வரான நீங்கள் அதற்காக என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்?

எனவே, தமிழகத்தின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழகத்தில் பெருகிவரும் இந்த போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டுமெனவும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் 850 அரசு அதிகாரிகளையும் விசாரித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்தப்படுகிறது" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MLA Condemn to DMK MKStalin TNGovt Drugs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->