பாஜக கவுசிலரின் பதவியை பறித்த வானதி சீனிவாசன்! என்ன நடந்தது? ஏன்? முழு விவரம்!
BJP MLA Vanathi order for kochi Badmaja menon issue
கேரளாவை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகியை, அவரின் பதவியில் இருந்து நீக்கி, பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ நடவடிக்கை எடுத்துள்ளார்.
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, பாஜகவின் தேசிய மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து பத்மஜா மேனன் நீக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் மகளிர் அணி தேசிய செயலாளராக கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த பத்மஜா மேனன் செயல்பட்டு வந்தார்.
மேலும் இவர் கொச்சி மாநகராட்சியின் கவுன்சிலராகவும் இருந்து வரும் நிலையில், கொச்சி மாநகராட்சி கூட்டத்தில் கல்வி நிலை குழு தொடர்பான காங்கிரஸ் கூட்டணி கவுன்சிலர்கள் தொடர்பு கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பாஜக கவுன்சிலர் பத்மஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது மாநில அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் பத்மஜா மேனனை கட்சி பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது.
இது குறித்து பாஜக மாநில தலைமை விசாரணை நடத்திய நிலையில், பத்மஜா மேனனை மகளிர் அணி தேசிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக, அக்கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவரும், தமிழக பாஜக எம்எல்ஏவும் வானதி சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
English Summary
BJP MLA Vanathi order for kochi Badmaja menon issue