சாதீய வன்மம், கொடுமை, அவமானம்...! - நந்தனை பாராட்டிய வானதி சீனிவாசன் எம்எல்ஏ! - Seithipunal
Seithipunal


நந்தன் திரைப்பட குழுவிற்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பாராட்டி உள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "நந்தன்" திரைப்படத்தின் இயக்குநர் இரா.சரவணன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

இத்திரைப்படம் நம்மை சுற்றி நடக்கும் சாதீய வன்மம், கொடுமை, அவமானம், இயலாமை, துணிவு, ஆதரவு என  பல்வேறு தளங்களை நுட்பமான உணர்வுகளோடு வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாடு மாதிரியான முன்னேறிய மாநிலத்தில் கூட இக்கொடுமைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதை இப்படம் தெளிவான உதாரணங்களைக் கொண்டு முன்வைப்பது அரசியலை தாண்டி பொதுமக்கள் மத்தியிலும் அதிர்வுகளை ஏற்படுத்த முடியும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக " சாதி வேறுபாடு" க்கு எதிராக பல்வேறு பெரியவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மாற்றங்களோடு இந்த படமும் தன் பங்கினை அழுத்தமாக பதிக்கிறது.

படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று வானதி சீனிவாசன் எம்எல்ஏ பாராட்டி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MLA Vanathi Wish to Nandan Movie team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->