எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் வெற்றி பெற வாய்ப்பு.!! - பாஜக எம்பி கருத்து.!!
BJP MP said opposition parties unite they chance to win
பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியசாமி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஒடிசா மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்திருப்பது இது வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த சுப்பிரமணியசாமி "அதற்கு ஒரு வாய்ப்பு இருக்கு. அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து வந்தால் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. நரேந்திர மோடி பிரதமராக இருந்த காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எதுவும் இந்து மக்களுக்காக இல்லை.
பாஜகவுக்காக ஓட்டு போடுபவர்கள் யார் என்றால் இந்துத்துவவாதிகள், இந்து மதத்தில் மறுமலர்ச்சி கொண்டு வருவார்கள், கோவில்களை விடுதலை செய்து கொடுப்பார்கள், சாதிகளை தாண்டி இந்துக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி தருவார்கள் என பாஜகவை நம்பியவர்கள் தான். அதுதான் பாஜகவுக்கு அதிக வாக்கு வங்கியாக உள்ளது.
மோடி நல்லது செய்கிறார் என சொல்லும் ஆட்கள் எல்லாம் அவருக்கு ஜால்ரா போடுபவர்கள் தான். பிரதமர் மோடி இந்துக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று தான் பாஜக தொண்டர்கள் பேசுகிறார்கள். இந்துக்கள் மத்தியில் ஒரு மறுமலர்ச்சியை கொண்டு வர வேண்டும்" என செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
English Summary
BJP MP said opposition parties unite they chance to win