"கும்பி எரியுது, குடல் கருகுது, கட்-அவுட் ஒரு கேடா?" திமுக ஒரு நடைப்பிணம் - கிழித்தெடுக்கும் பாஜக! - Seithipunal
Seithipunal


பவள விழா என்ற பெயரில் திமுகவின் கொடிகள், தோரணங்கள், கட்-அவுட்டுகள், ஆடம்பரம் என சாலை முழுவதும் திமுகவினர் அராஜகம் செய்துள்ளதாக, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "ஆளும் கட்சி என்பதால் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம், கேள்வி கேட்பார் இல்லை என்ற நிலை தமிழகத்தில் நிலவுகிறது. இதே திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது திமுக தலைவரும், இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கைகளை காண்போமா??

அக்டோபர், 27,2017.
"கும்பி எரியுது, குடல் கருகுது, கட்-அவுட் ஒரு கேடா?"

"அடிக்கு அடி பேனர் வைக்கும் கலாசாரத்தை உருவாக்கி, இந்தியாவுக்கே தவறான முன்னுதாரணத்தைக் காட்டிவரும் ‘குதிரை பேர’ அதிமுக அரசு, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படுவது சட்டமீறல் மட்டுமின்றி, நீதிமன்ற அவமதிப்பாகும்". 

‘தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி நிர்வாகம் ஒரு நடைப்பிணம்’" - 

மக்களின் உயிரையும் நலனையும் மதிக்காத ‘குதிரை பேர’ அரசு, நீதிமன்றத்தையும் அவமதித்து ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது. எத்தர்களின் பித்தலாட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு?'

19,ஜூன் 2018.
பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள், ஃபிளக்ஸ்கள் வேண்டாம் : திமுக தலைவர் மு க ஸ்டாலின்.
  
செப்டம்பர் 13, 2019.
"திமுக நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்தால்  அதில் நான் கலந்து கொள்ளமாட்டேன்" :

செப்டம்பர் 16,2019.
பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்கப்பட மாட்டாது - சென்னை உயர்நீதி மன்றத்தில் தி மு க பிரமாண பத்திரம் தாக்கல்.

இப்படியெல்லாம் பேசிய மு.க. ஸ்டாலின் அவர்களே, நான் கேட்கிறேன், 

"கும்பி எரியுது, குடல் கருகுது, கட்-அவுட் ஒரு கேடா?"

"திமுக நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்தால்  அதில் நான் கலந்து கொள்ளமாட்டேன்"  என்றீர்களே, இப்போது பவளவிழாவில் கலந்து கொள்வது ஏனோ?

தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் திமுக ஒரு நடைப்பிணம் என்றால் ஒப்புக்கொள்வீர்களா?

நீதிமன்றத்தை அவமதித்து ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிற, எத்தர்களின் பித்தலாட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு? என்ற உங்களின் அன்றைய கேள்வி இன்றைக்கு உங்களுக்கும் பொருந்தும் தானே? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan Condemn to DMK MKStalin Pavala vizha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->