ஜெய் பஜ்ரங் பலி கோஷம் தவறில்லை! மத அடிப்படைவாதிகளுக்கு பாஜக பதிலடி!
BJP Narayanan reply Amaran army issue
பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்தி குறிப்பில், 'பஜ்ரங் பலி' என்றால் வைரம் போன்ற வலிமையான உடல் கொண்டவர் என்று பொருள். ஆனால், ராணுவ வீரர்கள் எப்படி அமரன் திரைப்படத்தில் 'ஜெய் பஜ்ரங் பலி' என்று ஹிந்து மத கோஷமிடுகிறார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். தாய்நாட்டைக் காக்கும் வீரர்கள் "வலிமையான இராணுவம் வாழ்க" என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
ஆனால், காஷ்மீரில் மத அடிப்படைவாத பயங்கரவாதிகளின் கோஷங்கள் என்னவென்று தெரியுமா?
*நாரா இ தக்பீர், அல்லாஹு அக்பர்.
* காஷ்மீரில் இருக்க வேண்டுமெனில், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள்.
* இங்கு நமக்கு என்ன வேண்டும்? ஷரியத் சட்டம்.
*கிழக்கிலிருந்து மேற்கு வரை இஸ்லாம் மட்டுமே.
* பாகிஸ்தான் வெல்க, வாழ்க!
* தீவிரவாதிகள் வருகிறார்கள், இந்தியா அதன் அழிவைக் காணும்.
* வேண்டும், வேண்டும், சுதந்திரம் வேண்டும், இந்தியாவிலிருந்து சுதந்திரம் வேண்டும்.
*காஷ்மீர் இஸ்லாமிய தேசமாகும்.
இந்தியாவுக்கு எதிரான இத்தகைய கோஷங்களை மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் எழுப்பினால், 'ஜெய் பஜ்ரங் பலி' என்றும் 'பாரத் மாதா கி ஜெய்' (பாரத அன்னை வாழ்க) என்றும் ராணுவத்தினர் உற்சாகமாக சொல்வதில் தவறில்லை. இஸ்லாமிய தேசத்தை படைப்போம் என்று சொல்பவர்களுக்கு எதிராக மதசார்பற்ற ஹிந்து கலாச்சாரத்தை வளர்ப்போம் என்று சொல்வதில் என்ன தவறு?
மத அடிப்படைவாதிகளும், பிரிவினைவாதிகளும் இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி என்ற உண்மையை உணர்ந்து நடந்து கொள்வது அவர்களுக்கு நல்லது என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan reply Amaran army issue