தமிழகத்தில் கிறிஸ்துவ, இஸ்லாமிய கல்லூரிகளில் மத வழிபாடு நடத்தலாம், இந்து மட்டும் நடத்த கூடாதா? பாஜக தரப்பில் பதிலடி!
BJP Narayanan reply to VCK Ravikumar Hindu Muslim
கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிப்பதாக விசிக எம்பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்த நிலையில், இதற்க்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வியைக் காவி மயமாகும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கல்வித்துறைக்குள் சமயத்தைக் கொண்டு வந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்க்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மதராஸாக்களில் இஸ்லாமிய மத போதனைகள் தான் கல்வியாக கற்றுக் கொடுக்கப்படுகிறது என்று ரவிக்குமாருக்கு தெரியுமா?
அதை விமர்சிக்க ரவிகுமாருக்கு தைரியம் உள்ளதா? கிருஸ்துவ பரப்பாளர்கள் (Christian Missionaries) நடத்தும் பள்ளிகளில் பைபிள் குறிப்புக்கள் இடம் பெறுகின்றனவே, அது ரவிக்குமாருக்கு தெரியுமா?
லயோலா கல்லூரியில் 'சர்ச்' உள்ளது என்பது ரவிக்குமாருக்கு தெரியுமா? கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் கல்லூரிகளில் மத வழிபாடு நடத்தலாம்,
ஆனால், பெரும்பான்மை மக்கள் கல்வி பயிலும் கல்விசாலைகளில் இறைவழிபாடும், கந்தசஷ்டி கவசமும் பாராயணம் செய்வது கண்டத்துக்குரியதா? சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வதா?
ஹிந்து சமயம் கல்வியை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, நாகரீகத்தை, ஒழுக்கத்தை, நேர்மையை, நீதியைத் தான் போதிக்கிறது என்பது ரவிக்குமாருக்கு தெரியாதது வியப்பில்லை.
இப்படி தொடர்ந்து ஹிந்து மத நம்பிக்கைகளை விமர்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு தான் கடும் கண்டனத்துக்குரியது என்று நாராயணன் தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan reply to VCK Ravikumar Hindu Muslim