ஏன் உதயநிதி மீது இவ்வளவு கோபம்? திமுகவின் கோஷ்டி பூசல் இவ்வளவு தூரம் வந்து விட்டதே! பாஜக தரப்பில் வந்து விழுந்த கமெண்ட்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அருகே திமுக இளைஞரணி சார்பாக உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சியில் அன்பரசன் பேசுகையில், "வரும் காலங்களில்  நடிகர்கள் அரசியலுக்கு வருவார்கள், ஆனால் அரசியலில் அவர்களால் வெற்றிபெற முடியாது. 

காரணம் நடிகர்களுக்கு அறிவு இருக்காது. அவர்களால் ஆட்சி நடத்த முடியாது. ஒரு கட்சியை நடத்துவது என்பது சாதாரண விஷயமா? எவ்வளவு பெரிய கட்சியான திமுகவே ஆட்சியை பிடிக்க முடியாமல் தெருவில் நின்றோம். 

தங்களுக்கு கூடும் கூட்டத்தை பார்த்தவுடன் கட்சி தொடங்கி, முதலமைச்சராகி விடலாம் என அரசியலுக்கு வரும் நடிகர்களே, அதெல்லாம்  எம்ஜிஆர் காலத்தோடு அது போய்விட்டது. தங்களை பார்க்க கூடும் கூட்டத்தை, வாக்குகளாக மாற்ற நடிகர்கள் நினைத்தால், அது நடக்காது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், " சினிமாவில் இருந்து முதல்வராவது எல்லாம் எம் ஜி ஆர்., ஜெயலலிதா காலத்தோடு போய்விட்டது. சினிமாவில் இருந்து வந்து முதல்வராகும் எண்ணத்தில் இருப்பவர்களின் கனவுகளை பொய்யாக்க வேண்டும்" :- அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

என்ன சொல்கிறார் இவர்? உதயநிதி ஸ்டாலின் முதல்வராக முடியாது என்கிறாரா?

அல்லது முதல்வராக அவர் எண்ணினால் அதை முறியடிக்க வேண்டும் என்கிறாரா?

அப்படி இரண்டுமே இல்லையென்றால் உதயநிதி ஒரு நடிகரே இல்லை என்கிறாரா?

ஏன் உதயநிதி மீது இவ்வளவு கோபம் அன்பரசன் அவர்களுக்கு?

தி மு கவின் கோஷ்டி பூசல் இவ்வளவு தூரம் வந்து விட்டதே!! என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan say about Anbarasan Seppech Udhay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->