அறியாமை, அலட்சியத்தில் உதயநிதி! இதுகூட தெரியாத துணை முதலமைச்சர் - செங்கல் விவகாரத்தில் பாஜக கிடுக்குப்புடி! - Seithipunal
Seithipunal


இன்று கேரளாவில் நடைபெற்ற மலையாள மனோரமாவின் இலக்கிய கலச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசுகையில், "எய்ம்ஸ் செங்கல் என்னிடம் தான் உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதியை மத்திய அரசு வழங்கும்போது அவர்களிடம் வழங்குவேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உதயநிதிக்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கொடுத்துள்ள பதிலில், "செங்கல்லை உதயநிதி திருடிச் சென்று விட்டார் என்று 26/03/2021 அன்று  அளிக்கப்பட்ட புகார் மீது இப்போதாவது காவல் துறை நடவடிக்கை எடுத்து செங்கல்லை மீட்குமா?

மேலும், இந்த மருத்துவமனைக்கு ஏற்கனவே மத்திய அரசு தன் பங்கை விடுவித்து கொண்டிருக்கிறது என்பதோடு, Japan International Cooperation Agency (JICA) தான் கட்டுமானத்திற்கான நிதியை அளிக்கிறது. 

இதனை தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியிருப்பது கூட தெரியாமல் துணை முதலமைச்சர் பேசியிருப்பது  நிர்வாகத்தின் மீதான அவரின் அறியாமையை, பொறுப்பின்மையை, அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. 

துறை அமைச்சர் ஒன்று பேசுகிறார், துணை முதலமைச்சர் மற்றொன்றை பேசுகிறார். முரண்பாடுகளின் மொத்த உருவமாக இந்த 'திராவிட மாடல்' அரசு திகழ்கிறது" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan thirupathy condemn to DMK DyCM Udhay AIIMS


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->