'அடங்க மறு, அத்து மீறு' சாதிய வெறியை தூண்டி ஓட்டுக்காக அலையும் விடுதலை சிறுத்தைகளை தான் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - பாஜக!
BJP Narayanan thirupathy condemn to VCK Thirumavalavan
திருப்பரங்குன்றத்தில் சனாதன சக்திகளை சரியாக கையாளாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் கலவரங்களை ஏற்படுத்துவார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
மேலும், பல நூறு ஆண்டுகளாக ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள் திருப்பரங்குன்றத்தில் தத்தமது வழிபாட்டு தலங்களில் வழிபட்டு வருகின்றனர். சமுக நல்லிணக்கத்தை கெடுக்க முயற்சிப்பவர்களின் அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், திருமாவளவனின் கருத்துக்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"திருப்பரங்குன்றத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிப்பதே 'முருகன்' எனும் சனாதன சக்தி தான். அவரையே 'கையாள' வேண்டும் என்று கொக்கரிப்பது மமதை.
பல ஆயிரம் ஆண்டுகளாக ஹிந்துக்கள் வழிபட்டு வரும் கடவுளை புறந்தள்ளி வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலுக்கு துணை நின்று, 'அடங்க மறு, அத்து மீறு' என்று ஜாதிய வெறியை தூண்டி, சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுக்காக அலையும் சமூக நல்லிணக்கணத்தை கெடுக்க முயற்சிக்கும் விடுதலை சிறுத்தைகளை தான் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என்று நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
BJP Narayanan thirupathy condemn to VCK Thirumavalavan