சமீபத்தில் பாஜகவில் இணைந்த திருச்சி சிவாவின் மகனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கிய அண்ணாமலை.!! - Seithipunal
Seithipunal


திமுகவில் அதிருப்தியில் இருந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அப்போது அவருக்கு மாநில அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது பாஜகவின் ஓ பி சி பிரிவின் மாநில பொதுச் செயலாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். 

சூர்யா பாஜகவில் இணைந்த போது, பாருங்கள் எவ்வளவு பெரிய தலைவரின் மகனை பாஜகவுக்கு கொண்டு வந்துவிட்டோம் என பாஜகவினர் கொண்டாடினார்கள். சூர்யா அவரது தந்தை உள்ளிட்ட திமுகவினர் மற்றும்  திமுக தலைமையும் மிக கடுமையாக விமர்சித்து வந்தார். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக பாஜக தலைமை தற்போது ஓபிசி பிரிவில் பொது செயலாளர் பொறுப்பை வழங்கியது உள்ளது. 

சூர்யாவிற்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு முக்கிய காரணம் உள்ளது. கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிகம் கிடைக்கவில்லை என்பதை புணர்ந்த பாஜக, அந்த வாக்குகளை தங்கள் பக்கம் கொண்டு வர தீவிரமாக திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த சூர்யாவிற்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp new posting for trichy siva son


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->