சாக்ஸ், சட்டை கிழிப்பு, அரசியல் ட்ராமா எல்லாம் மறந்துவிட்டதா முதிர்ச்சியற்ற முதல்வர் ஸ்டாலின்? பாஜக SG சூர்யா கண்டனம்!
BJP SG Surya condemn to DMK CM Stalin PMK Ramadoss issue
உங்கள் தந்தையே மரியாதை கொடுத்து பேசிய அரசியல் தலைவர் மரு இராமதாஸ் அவர்கள், அப்படிப்பட்டவரை இகழ்ந்து பேசியது முற்றிலும் தவறு. தவறை திருத்திக்கொள்ளுங்கள் என்று, பாஜக மாநிலச் செயலாளர் SG சூர்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "பண்பு என்பதே இல்லாத 'முதிர்ச்சியற்ற முதல்வர்' அவர்களுக்கு வணக்கம்! பங்களாவில் பகட்டு வாழ்கை வாழ்ந்து, அங்கு அனுபவித்த அந்த சொகுசோடு முதல்வர் பதவியை பிடித்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்...
இந்த விஷயத்தில் உங்களைவிட எனக்கு வயது குறைவு என்றாலும் நீங்கள் இன்று நடந்து கொண்ட விதத்தை வைத்து பார்க்கும்போது நிச்சயம் உங்களுக்கு நான் இதனை சொல்லி பாடமெடுக்கலாம்...
2011 முதல் 2021 வரை பத்து ஆண்டுகள் எதிர்க்கட்சியாக திமுக காய்ந்து கிடக்கும்போது தினம் ஒரு அறிக்கை, சட்டசபையில் சட்டை கிழிப்பு, விதவிதமான கருஞ்சட்டை அணிந்த போராட்டங்கள், 'நமக்கு நாமே' என நடத்தப்பட்ட நாடகங்கள், கொரோனா காலம் என்று கூட பார்க்காமல் மக்கள் உயிருக்கும், உணவிற்கும் தவிக்கும் வேளையிலும் கூட அரசியல் ஆதாயம் தேடியது என சீரியஸாகவும்!
கரும்புக்காட்டுக்குள் 'சாக்ஸ்' அணிந்து, பதனியில் சக்கரை போட்டுருக்கீங்களா? என காமெடியாகவும்! நீங்கள் நடத்திய அரசியல் ட்ராமா எல்லாம் மறந்துவிட்டதா?
இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக அரசியல் சூழலில் தற்போதைய மூத்த தலைவர், பாமக நிறுவனர் அய்யா மருத்துவர்.ராமதாஸ் அறிக்கையை பற்றி பத்திரிகையாளர்கள் கேட்கும்போது 'அவர் தினமும் அறிக்கை விடுகிறார் அதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை' என கூறியது முற்றிலும் தவறானது..
ஒரு மாநிலத்தின் முதல்வர் அனைவருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர் அப்படி இருக்கும்போது மூத்த அரசியல் தலைவர் விடும் அறிக்கையை இப்படி முதிர்ச்சியில்லாமல் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது.
உங்கள் தந்தையே மரியாதையை கொடுத்து பேசும் அரசியல் தலைவர் திரு.மரு.ராமதாஸ் அவர்கள், அப்படிப்பட்ட அவரை நீங்கள் இப்படி இகழ்ந்து பேசியது முற்றிலும் தவறு... தவறை திருத்திக்கொள்ளுங்கள் முடிந்தால் பிராயச்சித்தம் தேடிக்கொள்ளுங்கள்.." என்று SG சூர்யா தெரிவித்துள்ளார்.
English Summary
BJP SG Surya condemn to DMK CM Stalin PMK Ramadoss issue