முடியாது என்று தெரிந்தும் சொன்னீர்களே? இப்போது ஒப்புக்கொள்கிறீர்களா? CM ஸ்டாலினுக்கு
BJP Tamilisai Soundararajan say about dmk net udhay CM Stalin
சென்னை கொளத்தூரில் இன்று ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ மூலம் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "2017ஆம் ஆண்டு மாணவி அனிதா உயிரை மாய்த்துக் கொண்டபோது, நாமெல்லாம் பெரும் வேதனையை அனுபவித்தோம்.
நீட் தேர்வு, அனிதாவின் கனவுகளை சிதைத்து விட்டது. இந்த தேர்வு ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கனவுகளையும் சீர்குலைக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் நடக்கும் சட்டப் போராட்டம் தொடர்ந்து உறுதியோடு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு மத்திய அரசு ஒருநாள் பணியப் போகிறது. இன்று அல்லாதிருந்தாலும், நாளை, நாளை இல்லாவிட்டாலும், நாளை மறு நாள் நீட் தேர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், முதல்வரின் இந்த பேசுச்சுக்கு பாஜகவின் தமிழிசை சவுந்திரராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து... நீட் தேர்வு ரத்து என்று சொன்னீர்களே?
முடியாது என்று தெரிந்தும் சொன்னீர்களே? இப்போது ஒப்புக்கொள்கிறீர்களா? திராவிட மாடல் பொய்யான வாக்குறுதிகள்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றீர்களே? இப்போது நேற்று.... இன்று... நாளை... நாளை மறுநாள்... என்று வாய்தா வாங்குகிறீர்களே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Tamilisai Soundararajan say about dmk net udhay CM Stalin