#BREAKING : குமரியில் அடுத்தடுத்த பேரூராட்சிகளை கைப்பற்றும் பாஜக.!
BJP to seize next municipalities in Kumari urban local body election
கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்தடுத்த பேரூராட்சிகளை கைப்பற்றி வருகிறது பாரதிய ஜனதா கட்சி.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள், மற்றும் முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் பேரூராட்சியை ஏற்கனவே பாஜக கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது புதுக்கடை பேரூராட்சியையும் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ளது
English Summary
BJP to seize next municipalities in Kumari urban local body election