ரெட் அலார்ட் - அவசரகால செயல்பாட்டு மைய எண்கள் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

இதுகுறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது:- "தெற்கு வங்கக் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம். திருவாரூர், கடலூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதனை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன்வளத் துறை இயக்குநருக்கும், கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. அதன் படி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகுகள் கரைக்கு திரும்பின. மேலும், ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்குச் செல்ல ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை. நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட

* நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு திரு. ஜானி டாம் வர்கீஸ். இஆப. (94999 56205, 88006 56753)

* மயிலாடுதுறை மாவட்டத்திற்கு திருமதி. கவிதா ராமு, இஆப. (90032 97303)

* திருவாரூர் மாவட்டத்திற்கு திருமதி. காயத்ரி கிருஷ்ணன். இஆப. (73388 50002)

* கடலூர் மாவட்டத்திற்கு திரு.எஸ்.எ.ராமன்.இ.ஆ.ப. (94458 83226) உள்ளிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் விதமாக, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 6 குழுக்கள் திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. 

இது தவிர, தேவைக்கேற்ப சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் உள்ளன.

மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் மூலம். கனமழை எச்சரிக்கை பெற்ற மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவசரகால செயல்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

precautionary measures intensified in delta districts


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->