மக்கள் பாதிக்கப்பட்டிருக்க "டெல்லியில் கூட்டணி" பேச்சு வார்த்தை.! ஸ்டாலினை சாடிய வானதி.!! - Seithipunal
Seithipunal


கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைத்து கொடுக்கப்பட்ட இறகு பந்து மைதானத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "தமிழத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட போது மாநில அரசின் கோரிக்கையை எதிர்பார்க்காமல் மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்து, ஆய்வு செய்து, அதற்கான அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.


அந்த  அறிக்கை அளித்த பிறகு நிவாரணத் தொகை வழங்கப்படும். முதற் கட்டமாக பேரிடர் நிதியில் இருந்து முதல் தவணை தொகை வழங்கப்பட்டுள்ளது. இது மாநில அரசு பங்கு, மத்திய அரசின் பங்கு என இல்லை. மக்கள் பிரச்சனையால் பாதிக்கப்படும் போது மாநில அரசு மத்திய அரசு மீது பழி போடுவது என செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசால் அனுப்பப்பட்ட மீட்பு குழுவினர் தான் பொதுமக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் செய்துள்ளனர். ஆனால் மக்கள் இங்கு பேரிடரில் பாதிக்கப்பட்டிருந்த பொழுது டெல்லியில் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.


மத்திய அரசு எந்த அளவிற்கு உதவி செய்தது என்பதை களத்தில் இருக்கும் மக்கள் சொல்வார்கள். இந்த பண அரசியலை நிறுத்திவிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை நீக்குவதற்கான பணிகளை தொடருங்கள். மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற சமயங்களில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட பேரிடர் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கொடுத்தது மத்திய அரசுதான். பொதுவெளியில் அமைச்சர்களின் பேச்சுக்கள் எவ்வாறு உள்ளது என்பது தெரியும். இணக்கமாக செயல்பட்டு மக்களின் பிரச்சினைகளை குறைக்க போகிறீர்களா? பிரச்சனையால் மக்களை துயர்படுத்த போகிறீர்களா? எது உங்களுக்கு முக்கியம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp vanathi criticized tngovt mkstalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->