இழிவு பேச்சு தான் "திமுகவின் பாரம்பரியம்".!! - வானதி சீனிவாசன் விமர்சனம்..!! - Seithipunal
Seithipunal


கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனிடம் தயாநிதி மாறன் ஹிந்தி பேசும் மக்கள் பற்றி இழிவாக பேசிய வீடியோ வைரலாவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் "திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தலைவர்கள் வட இந்தியர்களை தரக்குறைவாக பேசுவது இது முதல் முறை அல்ல, பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியுள்ளனர். தயாநிதி மாறனும் இப்படி பேசுவது முதல் முறையல்ல. திமுகவைச் சேர்ந்த எம்பி நாடாளுமன்றத்தில் கோமுத்ரா என கூறிவிட்டு மன்னிப்பு கேட்டு கேட்டு வந்தார். இவ்வாறு தொடர்ச்சியாக மொழியை வைத்து பிற மாநிலங்களை இழிவு படுத்தி பேசுவது திமுகவின் பாரம்பரியத்தில் உள்ள விஷயம். 

டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் நிதிஷ்குமார் இந்தி தெரியாதது குறித்து பேசியதாக சொல்கிறார்கள். எங்கோ விமான நிலையத்தில் இந்தி தெரியாதது குறித்து பேசியதற்கெல்லாம் ட்விட் போடும் முதலமைச்சர், இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிதீஷ்குமார் இந்தி தெரியாது குறித்து பேசியது பற்றி ஏன் வெளியே கொண்டுவர வரவில்லை. கூட்டணி கட்சி என்பதால் இந்த விவகாரம் வெளியே வரவில்லையோ, இதே வேறு யாராலும் பேசி இருந்தால் டவிட் போட்டு இருப்பார்" என விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp vanathi said Derogatory speech is the tradition of DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->