உதயநிதி பேச்சால் "I.N.D.I.A" உடைய போகிறது"- வானதி சீனிவாசன், பாஜக!
Bjp Vanathi said that India alliance will break due to udhayanithi
உதயநிதி மட்டுமல்ல யாராலும் சாதனத்தை அழிக்க முடியாது!
சனாதான தர்மத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "இன்னும் அந்த குடும்பத்தில் இருந்து எத்தனை தலைமுறைகள் வந்தாலும் இந்த நாட்டில் இருந்து இந்து வாழ்வியல் முறையான சனாதனத்தை அவர்களால் அழிக்க முடியாது. இதனை அவருடைய தாத்தாவும், தந்தையும் முயற்சி செய்து பார்த்து விட்டார்கள்.
இன்னும் எத்தனை பேர் வந்து எத்தனை முயற்சி செய்தாலும் இந்த சனாதனம் என்பது காலத்திற்கு ஏற்ப மாற்றத்தை தன்னோடு வாங்கிக்கொண்டு என்றும் நிலையான வாழ்வியல் நெறிமுறைகளோடு இந்தியாவில் இருக்கத்தான் போகிறது.
அவர் கூறிய கருத்துக்கு ஒவ்வொரு கட்சியினரும் அவர்களின் கருத்துக்களை கூறுகின்றனர். இண்டியா கூட்டணி கட்சிகள் ஒன்றிணைவதால் இவருடைய பேச்சுக்கள் பிரபலமாகவில்லை. இவருடைய இத்தகை பேச்சினால் இண்டியா கூட்டணியே உடைய போகிறது" என தெரிவித்துள்ளார்.
English Summary
Bjp Vanathi said that India alliance will break due to udhayanithi