#BREAKING : குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்.. பரபரப்பு கருத்துக்கணிப்பு.!
BJP will form government again in Gujarat exit polls
குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி என 2 கட்டங்களாக நடைபெற்றது.
குஜராத்தில் பாஜக தொடர்ந்து ஆட்சி அமைத்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த முறை நடைபெற்ற குஜராத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. குஜராத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் நோக்கில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
அதேபோன்று டெல்லி மற்றும் அண்டை மாநிலமான பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சியும் குஜராத் தேர்தலில் களமிறங்கியுள்ளது.
182 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தின் தேர்தல் திருவிழா பல்வேறு எதிர்பார்ப்புகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வந்தது. அதன் படி, கடந்த 1-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இன்று இரண்டாவது கட்ட வாக்கு பதிவுகளும் நிறைவடைந்தது.
இந்த நிலையில் நியூஸ் எக்ஸ் மற்றும் டிவி 9 பத்திரிக்கைகள் குஜராத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆளும் பாஜக 117 முதல் 140 தொகுதிகளையும், காங்கிரஸ் கட்சி 34 முதல் 51 தொகுதிகளையும், ஆம் ஆத்மி கட்சி 6 முதல் 13 தொகுதிகளையும், 1 முதல் 3 தொகுதிகளை இதர கட்சிகளும் கைப்பற்றும் என கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
English Summary
BJP will form government again in Gujarat exit polls