ஒரு தொகுதி கூட வரல., மொத்தமாக வாஷ்-அவுட் ஆன பாஜக | அடித்து துவம்சம் செய்த எதிர்க்கட்சிகள்! - Seithipunal
Seithipunal


குஜராத், ஹிமாசலப் பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல் உடன், உத்தர பிரதேசத்தின் மெயின்புரி மக்களவை தொகுதி மற்றும் 6 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஒரு இடத்தில் கூட பாஜக முன்னிலை பெறாமல் வாஷ் அவுட் ஆகியுள்ளது.

உத்தர பிரதேசம் : மெயின்புரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் பாஜக வேட்பாளரைவிட 1.50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் பெற்றுள்ளார். 

6 சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம் :

உத்தரப்பிரதேசம் : 
ராம்பூா் தொகுதி - சமாஜவாதி முன்னிலை
கடோலி தொகுதி - ராஷ்டிரிய லோக் தளம் முன்னிலை

ராஜஸ்தான் : சா்தாா்சாஹா் - காங்கிரஸ் முன்னிலை
பிகார் : குா்ஹனி - ஐக்கிய ஜனதா தளம் முன்னிலை
சத்தீஸ்கர் : பானுபிரதாபூா் - காங்கிரஸ் முன்னிலை
ஒடிஸா : பதாம்பூா்,  - பிஜு ஜனதா தளம் முன்னிலை
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

By Election 2022 poll bjp all loss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->