அடுத்த பேரிடி.. நெல்லை பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு.!! - Seithipunal
Seithipunal


நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஓட்டல் ஊழியர்களிடமிருந்து நான்கு கோடி ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் புயலை கிளப்பிய நிலையில் அந்த பணத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் கொடுத்துள்ளது. 

அதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளது. இதனால் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது நயினார் நாகேந்திரனுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case filed against thirunelveli BJP candidate nainar nagenthiran


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->