சவுக்கு சங்கருக்கு புதிய சிக்கல்.!! முன்பே விடுதலையான மேல்முரையீடு செய்த அரசுத் தரப்பு..!! - Seithipunal
Seithipunal


பிரபல 'சவுக்கு மீடியா' யூடியூப் சேனலின் நிறுவனரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், பெண் காவலர்களை தரக்குறைவாக பேசியதாகவும், மேலும் போதைப்பொருள் பயன்படுத்தியாகவும் கூறி போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். 

முன்னதாக சவுக்கு சங்கர் கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் ரகசிய பிரிவில் பணியாற்றி வந்தார். அப்போது சில தொலைபேசி ஒட்டுக்கேட்பு ரகசியங்கள் அடங்கிய உரையாடல்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக சிபிசிஐடி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் 2017ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகவில்லை என்று கூறி சவுக்கு சங்கரை விடுதலை செய்தது. இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் அந்த தீர்ப்பை எதிர்த்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

அதில் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்த பென் டிரைவ் சவுக்கு சங்கருடையது தான். அந்த ரகசியங்களை வெளியிட்டதும் அவர் தான். விசாரணை நீதிமன்றம் அதை கருத்தில் கொள்ளாமல் அவரை விடுதலை செய்துவிட்டது என்று சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறையில் உள்ள சவுக்கு சங்கர் 4 வாரத்திற்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBCID Appeals in the Aquittal Case After Seven Years on Savukku Sahnkar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->