நயினாரின் தலைக்கு மேல் கத்தி.!! ரூ.4 கோடி வழக்கில் மீண்டும் சம்மன்.!! - Seithipunal
Seithipunal


தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகிகளை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் தமிழக பாஜக மாநில நிர்வாகி கோவர்தனின் இல்லம் மற்றும் அவரது நட்சத்திர விடுதியில் சோதனை மேற்கொண்டனர். 

தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் விவகாரத்தில் கோவர்தனுக்கு தொடர்பு இருப்பதால் சோதனை மேற்கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த நிலையில் தமிழக பாஜக மாநில நிர்வாகி கோவர்த்தனின் டிரைவர் விக்னேஷுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிப்பட்டது தன்னுடைய பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் பலமுறை விளக்கம் அளித்த போதிலும் அவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் 2வது முறையாக நயினருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cbcid sent summon to BJP leader Govardhan driver


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->