சென்னையில் கைது செய்யப்பட்ட முக்கிய புள்ளி.! அடுத்தடுத்து கைது நடவடிக்கை தொடருமா? வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


தேசிய பங்கு சந்தையில் முறைகேடு நடந்தது தொடர்பாக, சென்னையில் தேசிய பங்கு சந்தையில் தலைமை நிர்வாக அதிகாரி பணியாற்றிய சித்ரா ராமகிருஷ்ணன் வீட்டில் சோதனை நடைபெற்றது.

பங்கு சந்தை ரகசியங்களை சட்டவிதிகளுக்கு முரணாக இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியார் ஒருவரிடம் சித்ரா ராமகிருஷ்ணன் ஆலோசனைகள் கேட்டு செயல்பட்டதாகவும், பகிர்ந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததன் அடிப்படையில்  இந்த சோதனை நடைபெற்றது.

இது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த ஆனந்த் சுப்பிரமணியன் என்பவர் செயலாக்க அதிகாரியாகவும், ஆலோசகராகவும் சித்ரா ராமகிருஷ்ணன் நியமித்ததை செபி அதிகாரிகள்  கண்டுப்பிடித்தனர்.

இதனையடுத்து, மும்பை சி.பி.ஐ. அதிகாரிகள் இதில் வழக்குப் பதிவு செய்து, பங்கு சந்தை முறைகேடு குறித்து பல்வேறு ஆதாரங்களை திரட்டி விசாரணை மேற்கொண்டனர். மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆனந்த் சுப்பிரமணியத்தை, நேற்று இரவு அதிரடியாக கைது செய்து மும்பைக்கு அழைத்து சென்றனர்.

ஆனந்த் சுப்பிரமணியன் கைதாகி இருப்பதையடுத்து, இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணனும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI arrests Anand Subramaniam chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->