மாற்றாந்தாய் மனப்பான்மையில் மத்திய அரசு!....வெளுத்து வாங்கிய திருச்சி சிவா! - Seithipunal
Seithipunal


திமுக எம்.பி. திருச்சி சிவா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,  எதிர்வரும்  குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப இருப்பதாக தெரிவித்த அவர், தமிழ்நாடு மாநிலம் தொடர்ந்து ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இன்னும் ஏட்டளவில் தான் இருக்கிறதே தவிர முன்னேற்றம் எதையும் காணவில்லை என்றும், அதற்காக எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை என்று கூறினார்.  ஒன்றிய அரசும் மாநில அரசும் சேர்ந்து செய்ய வேண்டிய திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய பங்குகளை எதையும் தருவதே இல்லை என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டிய அவர், மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு நடந்து கொள்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வரும் நிலையில், அதற்குரிய நியாயமான நிதி ஒன்றிய அரசு வழங்காமலேயே வருவதை இந்த முறை நாங்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் முக்கியத்துவம் கொடுத்து எழுப்புவோம் என்றும், அதானி பிரச்சனை உள்பட எல்லா பிரச்சனைகளும் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் எழுப்பப்படும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central government in the attitude of a stepmother trichy siva who has whitewashed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->