மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகை.. நாளை வேலூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 9 ஆண்டுகால சாதனைகளை விளக்க நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். 

அதன்படி வேலூரில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்தது. இதனிடையே இந்த பொதுக்கூட்டம் வரும் ஜூன் 11ம் தேதி நடைபெறும் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு விமானம் மூலம் சென்னை வருகிறார். அதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து வேலூருக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார்.

அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையொட்டி வேலூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central minister Amithsha comes to tamilnadu today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->